நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி… இல்லையேல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி ; திமுகவுக்கு கண்டிஷன் போட்ட கமல்ஹாசன்?

Author: Babu Lakshmanan
23 January 2024, 9:51 pm

நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் 2 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் முக்கிய பிரதான கட்சிகள், தேர்தல் குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் 2 நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது. கமல்ஹாசனின் சிந்தனைகளோடும் , கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணியில் இணைவோம் 2 நிபந்தனைகளோடும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டணியை தான் பார்த்துக்கொள்வதாகவும், தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுமாறு கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ