மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது…பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது : திமுக அமைச்சர் திட்டவட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 5:48 pm

மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது…பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது : திமுக அமைச்சர் திட்டவட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை தூர் வாருவதற்கு 95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பூசத்துறையில் தூர்வாரும் பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது. குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது. காலூன்ற முடியாது.

மோடியிடம் மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக மறைந்த தலைவர் கருணாநிதி புகழை யாராலும் மறைக்க முடியாது.

அவரது புகழை மோடிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் இன்றைக்கும் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்க கூடியதாக உள்ளது

இவைகள் மோடிக்கு தெரியாமல் போய் இருக்கலாம் அல்லது தெரிந்து மறந்து இருக்கலாம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரை மோடி உச்சரித்தாலும் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கப்போவது கிடையாது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு புறக்கணித்தது கிடையாது.

மத்திய அரசு திட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்பு குறைவு மாநில அரசின் பங்களிப்பு அதிகம் இருப்பினும் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது என கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி