3வது முறையாக மோடி வந்தாலும் வரலாம்.. ஆனால் ; காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் TWIST!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 1:47 pm

3வது முறையாக மோடி வந்தாலும் வரலாம்.. ஆனால் ; காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் TWIST!!

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தேர்தல் முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. சிலர் இதை குறைத்து மதிப்பிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாகும். எனது அனுபவத்தில் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இருந்தது இல்லை. பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. பட்டதாரிகளின் வேலையின்மை 42 சதவீதமாக உள்ளது.

14 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உருவாக்கியது. அது தேர்தல் அறிக்கை என்று பெயரிடப்படவில்லை. அதை மோடியின் உத்தரவாதம் என்கிறார்கள். பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அந்த வழிபாடு நரேந்திர மோடியை வணங்குகிறது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப்பெற தொடங்கியதும் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும்.

பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அந்த வழிபாடு நரேந்திர மோடியை வணங்குகிறது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப்பெற தொடங்கியதும் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும். மோடி மீண்டும் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை திருத்தலாம். 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: வானொலி Akashvani, பொதிகையும் போச்சு.. இப்ப காவிக்கறை : BJP அரசுக்கு CM ஸ்டாலின் கண்டனம்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பேசாமல் இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாராளுமன்ற முதல் அமர்விலேயே குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும் என அவர் பேசினார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!