வயநாடு மக்களுக்காக ‘மொய்விருந்து’… பிரியாணி கடை உரிமையாளரின் ‘பிரியாக் கரம்’.. (வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2024, 1:41 pm

திண்டுக்கல் முஜீப் பிரியாணி குழுமத்தின் முயற்சிக்கு நாமும் கைகொடுப்போம்.என்று தற்போது வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுப்பி வைத்திருக்கும் உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் நாளை மறுநாள் மாலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற இருக்கும் மொய் விருந்திற்கு அனைவரையும் அழைத்துள்ளார்.

பிரியாணி முதல் அனைத்து வகையான உணவுகளையும் இலவசமாக உண்டு பின்னர் தங்களால் இயன்ற தொகையை வழங்கும் பட்சத்தில் அந்தத் தொகை நமது அண்டை மாநிலமான கேரளாவிற்கு அனுப்பப்படும் என அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த தகவல் தற்போது வாட்ஸ் அப் பேஸ்புக் மூலமாக வைரலானதை தொடர்ந்து திண்டுக்கல் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மொய் விருந்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!