அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தில் பங்கேற்ற பெண்களுக்கு பணம் பட்டுவாடா : திமுக நிர்வாகிகளின் வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 5:29 pm

அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தில் பங்கேற்ற பெண்களுக்கு பணம் பட்டுவாடா : திமுக நிர்வாகிகளின் வீடியோ வைரல்!

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து இரண்டு நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்

இந்நிலையில் இன்று காலை தேனி பங்களாமேட்டு பகுதியில் இரண்டாவது நாளாக திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திறந்த வேனில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சிக்காக தேனி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து திமுக சார்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பிரச்சார கூட்டத்திற்கு திமுக நிர்வாகிகள் அழைத்து வந்திருந்தனர்

பிரச்சார நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு முன்பே பங்களா மேட்டில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா மற்றும் டோக்கன்களை திமுக நிர்வாகிகள் வழங்கி வந்தனர்.

நான்கு நான்கு பெண்களாக வரவழைக்கப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது மேலும் ஒன்றிய நிர்வாகிகள் மூலம் அச்சடிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!