பழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய பக்தர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 12:46 pm

பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் சார்பில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்களை இருந்த பணத்தை திருடுவதற்காக நோட்டமிட்ட தென்காசி சேர்ந்த சுந்தர் என்பவர் உண்டியலில் இருந்து ரூ. 300 ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.

இதில் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் செக்யூரிட்டிகள் சுந்தரை பிடித்து மலை அடிவாரத்தில் உள்ள அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உண்டியலில் பணம் திருடியதாக சுந்தரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?