கரும்பு காட்டுக்குள் கட்டு கட்டாக பணம்: ரூ.1 கோடி பணம் மீட்பு.. விசாரணையில் பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2022, 1:41 pm

ஆத்தூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஒரு கோடி பணம் மீட்ட போலீசார் விவசாயிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய் புதூர் கிராமத்தில் சாமியார் கிணறு என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி லோகநாதன்(45).

இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 7 தேதி இரவு அப்பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த இரண்டு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தனது வீட்டில் இருந்த 48,000 ரூபாய் மற்றும் கால் பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாகவும் முதலில் கூறியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் தனது நண்பர் மணிவிழந்தான் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன் மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேக்கில் இரண்டு கோடி பணத்தை எனது வீட்டிற்கு கொண்டு வந்து அதை பாதுகாப்பாக வைக்கும் படி கூறிச் சென்றனர்.

அதில் வைத்திருந்த ஒரு கோடி பண பேக்கை முகமூடி கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது,

இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் தடயறிவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயங்களை சேகரித்து தொடர்ந்து அவரது நண்பர் கணேசனையும் வரவழைத்து விசாரணை செய்து இரண்டு கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்றும் விசாரித்தனர்.

அப்போது இரண்டு பேரும் முறையாக பதில் அளிக்காமல் மாறி மாறி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மூன்று தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர கிடுக்குப் பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது நேற்று தனது கரும்பு தோட்டத்தில் ஒரு கோடி ரூபாய் பணபேக்கை முகமூடி கொள்ளையர்கள் வீசி சென்றதாக போலீசாரிடம் கொடுத்த தகவலின் பேரில் டி எஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் விவசாயி லோகநாதரிடம் எப்படி வந்தது பனம் கொள்ளை போனதாக கூறப்பட்ட சம்பவம் குறித்தும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 588

    0

    0