மொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்.. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி : அழுது புலம்பிய மூதாட்டி!
Author: Udayachandran RadhaKrishnan8 ஏப்ரல் 2024, 11:01 காலை
மொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்.. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி : அழுது புலம்பிய மூதாட்டி!
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காங்ககுப்பம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் திமுகவின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் உறவினராகும்.
ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இருவரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மர்ம நபர் ஒருவர் காவல்துறையினருக்கும் தேர்தல் பறக்கும் படையினருக்கும் தேர்தலுக்காக பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக நடராஜன் என்பவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வருவாய் துறையினர் தேர்தல் பறக்கும் படையினர் காங்குப்பம் கிராமத்தில் உள்ள நடராஜன் என்பவர் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
அங்கு நடராஜன் என்பவர் வீட்டை தட்டி அரை மணி நேரம் கூப்பிட்டும் யாரும் கதவை திறக்காததால் பக்கத்து வீட்டில் ஏறி மொட்டை மாடி இறங்கிய காவல்துறையினருக்கு சுமார் 500 ரூபாய் பணக்கட்டுகள் ஐந்து கட்டுகள் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்த படிக்கட்டு கதவை உடைத்து அதிரடியாக உள்ளே இறங்கிய காவல்துறையினரைக் கண்டு நடராஜனின் மனைவி கூச்சலிட்டனர்.
பின்னர் கதவைத் திறந்து உள்ளே வந்த வருவாய்த்துறை நிறம் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித்துறையினர் வீடு முழுவதும் சோதனை செய்ததில், மொட்டை மாடியில் கிடைத்த பணம் 2.5 லட்சம் மற்றும் பீரோவில் இருந்த பணம் உள்பட 7.50 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கிராம மக்களிடம் விசாரணை செய்ததில் நடராஜன் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும் இவர் துரைமுருகனின் உறவினர் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தால் பல ஆண்டுகளாக பேசுவதில்லை எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
வீட்டிற்குள் இருந்த பணம் 5 லட்சம் வட்டிக்கு கொடுத்ததாகவே இருக்கட்டும் ஆனால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த 2.5 லட்சம் பணம் யாருடையது எப்படி மொட்டை மாடிக்கு எப்படி சென்றது என்று காவல்துறையினர் நடராஜன் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பணம் திமுகவை சேர்ந்ததா அல்லது அதிமுகவை சேர்ந்ததா அல்லது பிஜேபி கட்சிக்கு சேர்ந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு திடீரென 50க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கிராமத்திற்குள் வந்ததால் கிராம மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0