மதுரையை அலற விடும் MONKEY குல்லா கொள்ளையர்கள்.. பூட்டியிருக்கும் வீடுகளுக்கு மட்டும் குறி!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2024, 6:26 pm

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் புறநகர் விரிவாக்கம் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனால், இங்கு மக்கள் தொகையும் உயர்ந்து வருகிறது. காலி வீட்டுமனை நிலம் மற்றும் கட்டுமான நடக்கும் கட்டடங்கள்தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எல்லைக்கு உட்பட்ட ராம்கோ நகரில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து நான்கு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வீட்டின் கதவை முகமூடி கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்த போது சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ரவி கூச்சல் போட்டதோடு பக்கத்து வீட்டிற்கு போன் செய்ததும் தெருவில் பகக்த்துவீட்டார்கள் கதவை திறந்து வரும் சத்தம் கேட்டு கொள்ளையர்கள் தப்பித்து ஓடினர்.

அவர்கள் கதவை உடைக்கும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து சுற்றுவட்டார பகுதிகளில், வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும், இப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் மற்றும் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர் மேலும் இங்கு அதிக அளவில் போலீசாரை கண்காணிக்க பணியில் ஈடுபடுத்தவேண்டும் அல்லது ஒரு புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றுபொதுமக்கள் ப கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்