ஒகேனக்கல்: கோடை வெப்பத்தை தணிக்க ஒகேனக்கல் காவிரி ஆற்றில் துள்ளி குதித்து ஆனந்த குளியல் போடும் குரங்குகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை ரசிப்பதற்கும், அருவிகளில் குளிப்பதற்காகவும் தினமும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறை தினங்களை கொண்டாட குடும்பத்தோடு வருகின்றனர்.
மேலும் கோடை காலம் தொடங்கினாலே கோடை வெப்பத்தை தணிக்க கூட்டம் கூட்டமாக ஏராளமானோர் ஒகேனக்கல் சுற்றுலாதலத்திற்கு வந்து அருவிகள் மற்றும் ஆற்றில் குளித்தும், கோடை வெயிலின் தாக்கத்தை தணித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஒகேனக்கல் பகுதிகள் முழுவதும் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க காவிரியாற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பது போலவே அங்குள்ள குரங்குகளும் ஆற்றில் துள்ளிக் குதித்து விளையாடி ஆனந்த குளியல் போடுகிறது.
ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகள் வெயில் தாக்கத்தால் தண்ணீரில் இருப்பது இதமாக இருப்பதால் நண்பர்களோடு துள்ளி குதித்து விளையாடி பொழுதை கழிக்கின்றனர். சுற்றுலா பயணிகளை போலவே ஒகேனக்கல்லில் உள்ள குரங்குகளும் சக குரங்குகளோடு கட்டிப்பிடித்து விளையாடுவதும், கொஞ்சி மகிழ்வதும், தண்ணீரில் மூழ்கி, மூழ்கி எழுந்து விளையாடுவது என ஆனந்தமாக குளித்து கோடை வெப்பத்தை தணித்து வருகின்றது.
குரங்குகள் தண்ணீரில் மூழ்கி எழுந்து சக குரங்குலோடு கொஞ்சி விளையாடி, தங்களின் அன்பை வெளிப்படுத்துவது ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். கோடை வெயிலை சமாளிக்க ஒகேனக்கல் அருவியிலும், ஆற்றிலும் குளிப்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள குரங்குகளுக்கும் ஒரு சுகம் தான் என்பதை குரங்குகளின் இந்த ஆனந்த குளியல் காட்டுகிறது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.