குளிக்கும் போது எட்டி பாக்கறதே தப்பு..இதுல வீடியோ எடுக்கறயா : குடிநீர் தொட்டியில் குளியல் போட்ட குரங்குகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 1:15 pm

கன்னியாகுமரி : தக்கலையில் வீட்டு குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் ஆனந்தமாக குரங்குகள் குளியல் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று ஆனந்தமாக குளிப்பது வழக்கம்.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஷிபா என்ற கவுன்சிலரது வீட்டின் மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் திடீரென வந்த குரங்குகள் ஆனந்தமாக குளியல் செய்துள்ளது.

இதைப் பார்த்த அவர் உடனடியாக தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் மேலும் சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டுள்ளார் .

குடிநீர் தொட்டிகள் குரங்குகள் ஒவ்வொன்றாக உள்ளே விழுந்து ஆனந்தமாக குளியல் செய்வதுடன் அதற்குரிய சேட்டைகளையும் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!