கடலில் இறங்கிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்.. 7 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2022, 4:17 pm

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்தது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள் கடந்த 5-ந் தேதி முதல் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது. இதனால் கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 1509

    0

    0