திமுகவோட செயல்பாடுகள் எங்களுக்கு பிடிக்கல.. நாங்க உங்க கட்சிக்கு வரோம் : 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2022, 12:19 pm

தி.மு.க.வின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் அக்கட்சியில் இருந்து விலகி 50கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவின் 51ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிமுக கொறடாவும் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி அவர்களின் பெயரில் கோவை மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கழகக் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி உற்சமாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக செட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரசாத் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட பொருளாளர் கருப்புசாமி கழக கொடியினை ஏற்றி வைத்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் ஜி.பி.பாபு, செயலாளர் சாஜி, சரவணன், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுகவின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் அக்கட்சியில் இருந்த கோவை கிழக்கு மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் மோகன்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி மாவட்ட பொருளாளர் கருப்புசாமி முன்னிலையில் அதிமுகவின் இணைந்தனர். இவர்களை கட்சி துண்டு அணிந்து வரவேற்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!