சிறகுகளை வெட்டி 500க்கும் மேற்பட்ட கிளிகள், முனியாஸ் பறவைகள் விற்பனைக்காக வீட்டில் பதுக்கல் : வனத்துறையினர் எடுத்த அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2022, 6:48 pm

திருச்சி : சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில் 300 பச்சைகிளிகள் உட்பட 500 பறவைகள் மீட்டு வனத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருச்சி பாலக்கரை அடுத்துள்ள கீழப்புதூர் பகுதியில் குருவிக்காரன் தெருவில் உள்ள வீடுகளில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கிளிகள் பறக்க முடியாத வகையில் அதன் சிறகுகள் வெட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகளையும், 150க்கும் மேற்பட்ட முனியாஸ் என்ற பறவையும் பறிமுதல் செய்தனர். தமிழக வனத்துறை சட்டபடி இந்த வகை பறவைகளை விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் சட்டத்தை மீறி பச்சைக்கிளிகள் மற்றும் முனியாஸ் உள்ளிட்ட பறவைகளை விற்பனைக்காக வைத்திருந்த வீட்டின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், வெட்டப்பட்ட கிளிகள் சிறகுகள் வளரும் வரை பராமரிக்கப்பட்டு அதன்பிறகு வனப்பகுதிகளில் விடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1320

    0

    0