2வது பிரசவத்திற்குச் சென்ற இருவர் பலி.. பதறிய பறிகொடுத்த சொந்தங்கள்.. தர்மபுரியில் நடந்தது என்ன?

Author: Hariharasudhan
13 November 2024, 5:28 pm

தர்மபுரியில் இரண்டாவது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பழைய புது ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. விவசாயம் செய்து வரும் கோகுல கிருஷ்ணன், குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், சந்தியா 2வது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்து உள்ளார். இவர்கள் குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சந்தியாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

எனவே, மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உறவினர்கள், மருத்துவர் இருக்கிறாரா எனக் கேட்டு உள்ளனர். அதற்கு, மருத்துவர்கள் உள்ளனர் என்றும், உடனடியாக அழைத்து வாருங்கள் என்றும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, சந்தியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

அங்கு சந்தியாவுக்கு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தை இறந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், சந்தியாவிற்கு அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது.

PEOPPLE

எனவே, தாயையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பில், சந்தியாவை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை ஊழியர்கள் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: சினிமாவில் இருந்து விலகும் சூப்பர் ஸ்டார்… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!

பின்னர் இது குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 206

    0

    0