2வது மனைவியுடன் சண்டையிட்ட பெண்… நள்ளிரவில் வீடு புகுந்து தாய், மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி…!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 12:32 pm

ராணிப்பேட்டை : நள்ளிரவில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு அடுத்த அண்ணா நகர், மாசாப்பேட்டை பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி பாஸ்கர் என்கிற பகடு பாஸ்கர்(33). இவர் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு துர்கா உள்பட நான்கு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மூத்த மனைவியை பாஸ்கர் மற்றும் துர்கா ஆகியோர் இணைந்து அடித்து தீயிட்டு கொளுத்தியதாக இருவர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பகுடு பாஸ்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 26ஆம் தேதி சிறையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், அதே பகுதியில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் அவரது 17 வயது மகள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

பகடு பாஸ்கர் சிறையில் இருந்த போது, அவரது இரண்டாவது மனைவியான துர்காவிற்கும், கணவனால் கைவிடப்பட்ட அந்த பெண்ணுக்கும் வாய் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை பாஸ்கர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் துர்கா, பாஸ்கரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பகுடு பாஸ்கர் கடந்த 28ஆம் தேதி இரவு 11 மணி அளவில், தான் வைத்திருந்த கத்தி எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். உடன் சென்ற துர்கா பாஸ்கர் வீட்டின் உள்ளே சென்றவுடன் வெளியே தாழிட்டுள்ளார்.

உள்ளே சென்ற பாஸ்கர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் அந்தப் பெண்ணின் மகள் கழுத்தில் கத்தியை வைத்து, தாய் மற்றும் மகளை கொன்று விடுவதாக கூறி, இருவரையும் நிர்வாணப்படுத்தி முதலில் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கழிவறையில் பூட்டி வைத்து பின்பு தாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இரவு 11 மணிக்கு சென்ற பாஸ்கர் காலை 3 மணி வரை தொடர்ச்சியாக இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ பதிவுகளாக எடுத்துக் கொண்டு, இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திலோ அல்லது வெளியே கூறினால் இருவரையும் எங்கு சென்றாலும் தேடி வந்து கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பாஸ்கரால் பாதிக்கப்பட்ட பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இது குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பாஸ்கர் என்கிற பகுடு பாஸ்கர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி துர்கா ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ கொலை முயற்சி, எஸ்சி, எஸ்டி ஆக்ட் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்

ஆற்காடு சுற்றுவட்டார பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவன், மனைவியிடம் சண்டையிட்டதாக தாய் மற்றும் மகளை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!