குடவாசலில் நிலத் தகராறில் தாயும், மகனும் கடப்பாரையால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். கொலை செய்துவிட்டு, தப்பியோடிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செருகளத்தூர் கிராமத்தில் பாஸ்கர் என்பவரின் மனைவி அலங்காரமேரி (50), அவருடைய மகன் அஜய் (24). ஆகியோர் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரின் அண்ணன் மகன்கள் அன்பழகன் (40), செபஸ்டின் (35) இவர்களுக்கும், பாஸ்கரன் குடும்பத்துக்குமிடையே பூர்வீக இடம் தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்தது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அடிக்கடி இரண்டு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று மாலை பாஸ்கரனின் மனைவி அலங்காரமேரி, அவரது மகன் அஜய் ஆகியோரை கடப்பாறையால் குத்தி விட்டு அன்பழகன் மற்றும் அவரது தம்பி செபஸ்டியன் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த அலங்காரமேரி, அஜய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றிய குடவாசல் காவல்துறையினர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய இருவரையும் குடவாசல் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
This website uses cookies.