Categories: தமிழகம்

தோட்டத்தில் விவசாயம் பார்த்து வசித்து வந்த தாய், மகன் படுகொலை : மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை!!

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே தோட்டத்தில் வசித்த தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ஏரியோட்டை அடுத்த குருக்களையன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40) விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

நேற்றிரவு தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டில் தனது தாய் சௌந்தரம்மாள் (வயது 60) என்பவருடன் தங்கினார். இன்று காலை அவரது தோட்டத்து வீட்டுக்கு பால் கறப்பதற்காக பால்காரர் வந்து பார்த்துள்ளார்.

அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் யார் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தாயும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AddThis Website Tools
Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

6 minutes ago
தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை… . மேலிடம் சொல்வதை செய்வேன் ; அண்ணாமலை அறிவிப்பு!தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை… . மேலிடம் சொல்வதை செய்வேன் ; அண்ணாமலை அறிவிப்பு!

தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை… . மேலிடம் சொல்வதை செய்வேன் ; அண்ணாமலை அறிவிப்பு!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…

25 minutes ago
10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த 50 வயது முதியவர்.. சிறிது நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்!10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த 50 வயது முதியவர்.. சிறிது நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்!

10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த 50 வயது முதியவர்.. சிறிது நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…

49 minutes ago

அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

1 hour ago

வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகள்… பொதுமக்கள் வரவேற்பு : ரூட் ரிதாம்ஸ் நிர்வாகிகள் பெருமிதம்!

கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…

2 hours ago

பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?

இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…

3 hours ago