முட்டை பொரியலில் எலி பேஸ்ட்.. மகளை கொல்ல முயன்ற கொடூரத் தாய்!!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2025, 10:38 am
மகளை கொலை செய்ய முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த கொடூரத் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.
இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: கள்ளக்காதலியின் குழந்தைகள் மீது கொடூர தாக்குதல்… காயத்தின் மீது மிளகாய் பொடி தூவி கள்ளக்காதலன் வெறிச்செயல்..!!
இவரது காதல் இவரது தாய் மல்லிகாவிற்கு தெரிய வந்த நிலையில் காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவரது மகள் மறுத்ததால் தனது மகளுக்கு முட்டை பொறியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து அவரை அவரது தாய் மல்லிகா கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்ற மகளை முட்டை பொறியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்த தாய் மல்லிகாவை போலீசார் கைது செய்தனர்