திருவாரூர்: குடும்ப தகராறில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட கம்பன்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன்.இவர் நாகப்பட்டினத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.இவரது மனைவி நந்தினி தேவி (வயது 31). இவர்களுக்கு குஷாந்த் (வயது 11) என்ற மகனும், ரோஷினி (வயது 10) என்கிற மகளும் உள்ளனர்.
குஷாந்த் ஆறாம் வகுப்பும்,ரோஷினி நான்காம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜெயசீலன் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவரை போனில் தொடர்பு கொண்ட மனைவி நந்தினிதேவி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.வீட்டில் குடும்ப செலவிற்கு கூடுதல் பணம் தேவைப்படுவதால் தொடர்ந்து வேலை பார்த்துவிட்டு பிறகு வருகிறேன் என ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.கணவன் வீட்டுக்கு வர மறுக்கிறார் என மனவேதனை அடைந்த நந்தினி தேவி வீட்டில் இருந்த எலி பேஸ்டை எடுத்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் தின்றுள்ளார். இதனையடுத்து ஒரு நாள் முழுவதும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர்களுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று கோபித்துக் கொண்டார் என்பதால் கணவர் ஜெயசீலனும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த மூன்று பேரும் வாந்தி எடுத்ததை பார்த்து விசாரித்தபோது எலி பேஸ்டை தின்றது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் உறவினர்கள் உதவியோடு மூவரையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நந்தினி தேவைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இரண்டு குழந்தைகளுக்கும் குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இதுகுறித்து கொரடாச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.