ஆட்சி மாற்றத்தால் ஊதியம் இல்லாமல் தவிக்கும் அம்மா கிளினிக் ஊழியர்கள் : 5 மாத ஊதியத்தை வழங்க கோரி தர்ணா!!
Author: kavin kumar31 January 2022, 6:34 pm
வேலூர் : ஆட்சி மாற்றத்தால் அம்மா கிளினிக் ஊழியர்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் ஒன்று “அம்மா மினி கிளினிக்”. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெரும் வகையில் ஒவ்வொறு பகுதியிலும் சிறிய மருத்துவமனைகள் அமைத்து ஆரம்ப கட்ட நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் இந்த மருத்துவமனையின் வேலையாகும். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கபடவில்லை என்றும், இப்போது உங்களுக்கு வேலை இல்லை நீங்கள் வீட்டிற்க்கு செல்லலாம் என்று உயர் அதிகாரிகள் கூறியதாகவும்,
நாங்கள் எல்லாம் எங்கே செல்வது என்று 50-க்கும் மேற்பட்ட அம்மா கிளினிக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் போர்டிகோ பகுதியில் அமர்ந்து கோஷம் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அங்கு வந்த போலிசார் மற்றும் அதிகாரிகள் இப்படி போராடுவது சட்டப்படி குற்றமாகும் என்று அறிவுருத்தினர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கண்ணிருடன் கலைந்து சென்றனர். மேலும் இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0