பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்..! கன்னியாகுமரியில் சோக சம்பவம்…

Author: kavin kumar
1 February 2022, 10:21 pm

கன்னியாகுமரி : குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான வர்க்கலையில் ரிசோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி விஜி (27), குழந்தை 2 வயதான பிரியா, மற்றும் பெயரிட்டபடாத 6 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் விஜியின் தாயார் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு இன்று மாலையில் வீட்டுக்கு வந்த போது வீட்டருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளது. வீட்டினுள் சென்று பார்த்தபோது அவரது மருமகள் விஜி தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டதையடுத்து அப்பகுதியினர் அங்கு வந்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தக்கலை டிஎஸ்பி கணேசன் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2568

    0

    0