2 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று தாய் தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீத முடிவு..சேலத்தில் சோகம்..!!

Author: Rajesh
15 February 2022, 1:44 pm

சேலம்: காடையாம்பட்டி அருகே குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபாகரன் (32). இவரது மனைவி மரகதம் (30). இவர்களது குழந்தைகள் செல்வகணபதி (7), கோகுலகண்ணன் (5).

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு அது முற்றியுள்ளது. இதில், பிரபாகரன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பிரபாகரன் வீட்டுக்கு வந்தபோது, மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அக்கம், பக்கம் தேடிப்பார்த்தபோது, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் மரகதம் மற்றும் இரு குழந்தைகளும் சடலமாக மிதந்தது தெரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி 3 பேரின் உடலை வெளியில் எடுத்தனர்.

இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், இரு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு மரகதமும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும், போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1749

    0

    0