தாயின் கள்ளக்காதலனால் கர்ப்பமான 17 வயது சிறுமி… தாயே பிரசவம் பார்த்த கொடுமை… கள்ளக்காதலனோடு சிக்கிய தாய்…!!!

Author: Babu Lakshmanan
14 May 2022, 7:25 pm

சென்னை : தாயின் கள்ளக் காதலனால் கர்ப்பமடைந்த 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய் மற்றும் கள்ள காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (45). ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவன் பிரிந்து சென்றதால், தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார் புவனேஸ்வரி. வீட்டிலேயே நொறுக்குத் தின் பண்டம் தயாரித்து வீதிவீதியாக சென்று விற்பனை செய்து வந்தார்.

இதன் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (50) என்ற ஆட்டோ ஓட்டுநருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த சிறுமிக்கு தாயின் கள்ளக் காதலன் முத்துக்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதன் காரணமாக நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த புவனேஸ்வரி வீட்டிலேயே தனது மகளுக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைப்பேறு காரணமாக உடல் ரீதியாக சோர்வடைந்த அந்த சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி அளித்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் லலிதா, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது தனது தாயின் கள்ளக் காதலன் முத்துக்குமார் தன்னை பலமுறை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதற்கு தாய் புவனேஸ்வரியும் உடந்தையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்குப் பின்னர் அந்த சிறுமியும், அவளது குழந்தையும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் லலிதா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு காவல் துறையினர் கள்ளக் காதலன், புவனேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 900

    1

    0