மருமகளுடன் படுக்கையில் பக்கத்து வீட்டுக்காரர்.. நோட்டமிட்ட மாமியார் : கடைசியில் டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2024, 3:56 pm

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமம் தலையாரி தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி வயது 58.

இவர் கணவன் ஒரு வருடத்திற்கு முன்பு உயிர் இழந்த நிலையில் மகன் ராஜசேகர் வயது 42 மருமகள் அமுல் வயது 38 ஆகியோருடன் வசித்துள்ளார்.

லட்சுமியின் மகன் ராஜசேகர் என்பவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து வேலை செய்து வரும் நிலையில் வேலை சம்பந்தமாக அடிக்கடி ஆந்திராவிற்கு சென்று மாத கணக்கில் தங்கி வேலை செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் பக்கத்து தெருவை சேர்ந்த சரவணன் வயது 42 என்பவருடன் லட்சுமி மருமகள் அமலுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சரவணன் அமுல் வீட்டிற்கு வந்து செல்வதையும் அவருடன் நெருக்கமாக பழகுவதையும் பார்த்து மாமியார் லட்சுமி பலமுறை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை மாமியார் லட்சுமிக்கும் மருமகள் அமலுக்கும் கடுமையான சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அமுல் தன்னுடைய கள்ளக்காதலன் சரவணன் இரவு 11 மணிக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது அமுல் மாமியாருடன் ஏற்பட்ட சண்டையை கூறியுள்ளார்.

இதனை அடுத்து அமுல், கள்ளக்காதலன் சரவணன் மற்றும் தோழி பாரதி வயது 34 ஆகியோருடன் சேர்ந்து மாமியார் லட்சுமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

இரவு அனைவரும் தூங்கிய போது மாமியார் லட்சுமியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து கொலையை மறைக்க மாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி மறுநாள் செவ்வாய் கிழமை காலை நாடகமாடியுள்ளார்.

இந்நிலையில் லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அதனை அடுத்து உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் கையால் கழுத்து நெறித்து தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் லட்சுமி உடலில் காயங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளதாகவும் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினரை விசாரித்ததில் அமலுக்கும் சரவணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இந்த தகவலின் அடிப்படையில் அமுல் மற்றும் அவரது தோழியான பாரதி கள்ளக்காதலன் சரவணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நெரும்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் என்பவரிடம் அமுல், பாரதி, சரவணன் மூவரும் சரணடைந்து தாங்கள்தான் லட்சுமியை அடித்து தூக்கில் தொங்க விட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து நேரில் சென்ற போலீசார் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து மூவர் மீதும் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து திருக்கழுக்குன்றம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?