என் மகள் மேலயே கை வைப்பியா? கேள்வி கேட்ட மாமியார் : மருமகன் செய்த வெறிச்செயல்.. மாதவரம் SHOCK!
திருவள்ளூர் மாதவரம் தபால் பெட்டி கண்ணன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 45 ) அவரது மனைவி ஜான்சி இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .
ஜான்சியின் தாயார் வசந்தி (வயது 65) கணவரை இழந்தவர் இவர்களுடன் தங்கி ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.புஷ்பராஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த புஷ்பராஜ் மனைவியிடம் சண்டையிட்டு அடித்ததால் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார் .
பிள்ளைகளை கவனித்துக் கொண்ட மாமியார் வசந்தியை போதையில் இருந்த புஷ்பராஜ் வீண் தகராறில் ஈடுபட்டு ஆத்திரத்தில் புஷ்பராஜ் திடீரென தனது மாமியாரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கீழே விழுந்த வசந்திக்கு பின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில், மயக்கமாகி கீழே விழுந்துள்ளார். சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகள் ஜான்சி தனது தாயாரின் தலையில் அடிபட்டு ரத்தம் வடிந்து மயக்கமாகி இருந்த நிலையை கண்டு அலறியபடி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: பழமை வாய்ந்த கண்ணகி கோவிலில் குவிந்த TN – KERALA மக்கள்.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வசந்தி உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்த மாதவரம் போலீஸ்சார் தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று புஷ்பராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.