4 வயது குழந்தையை இடுப்பில் கட்டி கிணற்றில் குதித்த தாய் : நொந்து போன குடும்பத்தினர்… கரூர் அருகே சோக சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2022, 10:03 pm
கரூர் : தாயும், 4 வயது மகனை உடம்பில் கயிறு துணியில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த கோடாங்கிபட்டி ஆச்சிமங்களம் கிராமத்தில் வசிப்பவத் அமிர்தலிங்கம், முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கனிஷ் என்கின்ற 4 வயது மகன் உள்ளான்.
முத்துலட்சுமி வீட்டில் தையல் இயந்திரம் வைத்து ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு துணிகள் தைத்து கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்துலட்சுமி தையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் பயன்படுத்தும் கட்டரை மகன் கனிஷ் கண்ணில் பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கனவே கண் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வரும் புதன்கிழமை அன்று மற்றொரு ஆப்பரேஷன் கண்களுக்கு செய்யப்பட உள்ள நிலையில் அவர்கள் மனமுடைந்து வீட்டில் சில நேரங்களில் அழுது கொண்டே இருந்துள்ளார்.
கடந்த ஒரு மாதங்களாக மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று இரவு 11.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய முத்துலட்சுமியும், அவரது 4 வயது மகனும் மாயமாகினர்.
இரவு முதல் அவரது கணவரும், அவர்களது உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்திருக்க கூடும் என சந்தேகித்துள்னர்.
இதனையடுத்து இன்று மதியம் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தாயையும், 4 வயது மகனையும் சடலமாக மீட்டனர்.
இதனை அடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயும், மகனும் உடலிலில் கயிறு துணியால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.