காருக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலம்… மகன் ரூபத்தில் வந்த எமன் ; போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 6:34 pm

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை மகன் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலணியில் நீண்ட நேரமாக ஒரு கார் நிற்பதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை ஆய்வு செய்தபோது, காரில் இறந்த நிலையில் ஒரு பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி சக்தி விநாயகபுரத்தைச் சார்ந்தவர் கலைச்செல்வி (67), இவரது கணவர் அந்தோணி பிச்சை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை என மூன்று பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மூத்த மகன் அந்தோணி பெரிசன் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் ரூபேசன் (40) திருமணம் ஆகி தூத்துக்குடி அந்தோனியார்புரத்தில் மனைவி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூபாய் 4 லட்சம் செலவு செய்து கலைச்செல்வி தனது வீட்டின் மாடியில் ரூம் எடுத்துள்ளார். கடந்த மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் செய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி அந்தோணியார்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மலை வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்தது. இதில் ரூபேசன் மனைவி வீடும் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ரூபேசன் தனது தாயார் கலைச்செல்வியை தொடர்பு கொண்டு சக்திவிநாயகபுரத்தில் தாயார் வசித்து வரும் வீட்டின் மாடியில் தனது குடும்பத்தினருடன் வந்து தங்குவதற்கு கேட்டுள்ளார். இதற்கு கலைச்செல்வி மறுத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறும் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சொத்தை தனக்கு பிரித்து தருமாறு பலமுறை கேட்டு, அவர் தனது தாயாரிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவரது தாயார் கலைச்செல்வி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று ரூபேசன் தனது தருவை குளத்தைச் சார்ந்த நண்பர் சூசை அந்தோணி என்பவரை அழைத்துக் கொண்டு, காரில் தனது தாயார் வீட்டிற்கு வந்து கலைச்செல்வியை அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக அவரது உடலை அவர்கள் இருவரும் வந்த காரில் ஏற்றி ஸ்டேட் பேங்க் காலணி அருகில் கொண்டு சென்ற போது, கொலை செய்தது எப்படியும் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்த ரூபேசன் மற்றும் அவரது நண்பர் சூசை அந்தோணி ஆகிய இருவரும் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறில் தனது தாயை மகன் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 512

    0

    0