‘நான் ‘ பட பாணியில் தாயை ‘அந்த ‘ நிலையில் பார்த்த மகன்.. கோர்ட் அதிரடி!

Author: Hariharasudhan
6 December 2024, 11:13 am

மதுரையில் தாய் வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்ததை மகன் பார்த்ததால், மகனை தாய் கொடூரமாக கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி ஆனந்தஜோதி (30). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், ஆனந்தஜோதிக்கும், அதே ஊரைச் சேர்ந்த மருதுபாண்டி (24) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஆனந்தஜோதி அந்த இளைஞர் உடன் தனிமையில் இருப்பதை, அவரது 4 வயது மகன் ஜீவா பார்த்து விட்டான்.

Mother killed her own son in Madurai

எனவே, எங்கே தனது கணவரிடம் பார்த்ததை மகன் சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில், பெற்ற மகன் என பாராமல், ஜீவாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்து உள்ளார். ஆனால், விஷப்பூச்சி கடித்து மகன் மயங்கி விழுந்தாக தாய் ஆனந்தஜோதி குடும்பத்தாரிடம் கூறி உள்ளார். எனவே, உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்று பரிசோதித்து உள்ளனர்.

இதையும் படிங்க: உங்க ஆரோக்கியத்திற்கு சரியான காவல் தெய்வம் இது தான்…!!!

அப்போது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இருப்பினும், சிறுவன் இறப்பில் சந்தேகம் இருந்ததால் அருகிலுள்ள வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். இதன்பேரில், தந்தை ராம்குமார் வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Mother killed son in Madurai

இதன்படி, முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆனந்தஜோதி மீது சந்தேகம் வலுத்ததால், தாயிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தகாத உறவால் பெற்ற மகனையே தாயே கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனிடையே ஆனந்தஜோதி, மருதுபாண்டி ஆகியோரை 2020 ல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை 5வது கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அரசுத் தரப்பில் வக்கீல் ராஜேந்திரன் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீதிபதி, ஜோசப்ராய் நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், குற்றம் உறுதி ஆனதால் ஆனந்தஜோதிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அதேபோல், மருதுபாண்டியை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 97

    0

    0