கணவனுக்கு தெரியாமல் காய்கறி கடைக்காரருடன் பழக்கம் : இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு உப்புமாவில் விஷம்.. கைதான கொடூரத் தாய்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 2:33 pm

கன்னியாகுமரி : காதலனுடன் திருமணம் செய்து கொள்ள சேமியா உப்புமாவில் விஷம் கலந்து ஒன்றரை வயது குழந்தையை கொலைசெய்து விட்டு நாடகமாடிய கொடூரத் தாயை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்( 34 ) கொத்தனார் . இவரது மனைவி கார்த்திகா (வயது 21) இவர்களுக்கு சஞ்சனா (வயது 3) பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளது .

இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவலளித்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை எடுத்துகொண்டு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேதபரிசொதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் .

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை விஷப்பொடியை சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது கார்த்திகாவின் செல்போனிற்கு வந்த அழைப்புகள் அழிக்கபட்டிருந்தன. இதைத் தொடர்ந்து போலீசார் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செல்போனிற்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதில் மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் அதிகநேரம் பேசியிருப்பதும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை பேசியதும் தெரிய வரவே கார்திகாவிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சுனிலை காவல் கஸ்டடியில் விசாரித்ததில் அவர் கார்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும் அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கார்த்திகா வாக்குமூலத்தில் காதலில் மூழ்கி இரண்டு குழந்தைகளை கொன்றாள் அவன் ஏற்றுகொள்வான் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கூறி வீட்டை சுற்றி கணவனிடம் கூறி அவர் வாங்கி வந்த பாலிடா பொடியை எலி சாவதற்காக தூவி வந்ததாகவும் அதை ஊர்மக்கள் பார்வைக்கு பார்கும்படி நடந்து கொண்டதாகவும் பின்னர் சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்பு மாவில் கலந்து கொடுத்தால் அவர்களது உடலில் இருந்து விஷத்தின் வாசனை வரவில்லை என்பதும் தெரியவந்தது.

மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிட்டதால் தப்பித்து கொண்டது. அந்த விசயம் தாமதமாக தெரிய வரவே அந்த குழந்தைக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதனிடையே மார்தாண்டம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தும் கார்த்திகாவை சிறையிலடைக்கும் முயற்ச்சி நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை ஏற்பாடுகளும் நடக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1644

    0

    0