அங்கன்வாடிக்கு சென்ற மகன், மகளை அழைத்து கிணற்றில் தள்ளிவிட்ட தாய் : முடிவில் நடந்த சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2023, 11:39 am

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், சுருதிஹா (5), தீபக் (3) இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் நேற்று பால்வாடியில் இருந்த தனது இரண்டு குழந்தைகளையும் அவரது தாய் ரேணுகா அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் நீண்ட நேரமாக வீடு வரவில்லை என தெரிகிறது.

ஏரிக்கரை ஓரமாக உள்ள கிணற்றில் மூன்று சடலங்கள் இருப்பதாக மாடு மேய்க்க வந்தவர் தகவல் தெரிவித்ததின் பேரில் உடனடியாக கலவை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் கலவை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மூன்று பேரையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து கலவை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?