மகன் கண் முன்னே துடித்துடித்து உயிரிழந்த தாய் : சாலை விபத்தால் நேர்ந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2023, 9:48 pm

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாண் போஸ்கோ இவரது மனைவி மரிய கொரோட்டி பிரீடா (வயது 40)இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் குலசேகரம் நாகக்கோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மரிய கொரோட்டி பிரீடா சாலையில் விழுந்துள்ளார்.

அதே நேரத்தில் குலசேகரத்திலிருந்து திருவட்டார் நோக்கி சென்ற அரசு பேருந்து மரிய கொரோட்டி பிரீடா மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.

மகன் கண் முன்னே தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் உயிரிழந்த மரிய கொரோட்டி பிரீடாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைக்கவைத்துள்ளது

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 470

    0

    0