பெற்ற மகனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய தாய் : பகீர் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2025, 1:21 pm
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மேதாரா பஜார் அருகே உள்ள பயிர் கால்வாயில் மூன்று பைகளில் 35 வயது மதிக்கத்தக்கவரின் உடல் கொலை செய்து உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூன்று சாக்குப் பைகளில் வைத்து வீசப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த மார்க்கபுரம் டிஎஸ்பி நாகராஜு தலைமையில் விசாரனை மேற்கொண்டனர். இந்த விசாரனையில் பிரகாசம் மாவட்டம், கும்பத்தில் உள்ள தெலுங்கு தெருவில் வசிக்கும் ஷ்யாம் (35) கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசியது கண்டு பிடித்தனர்.
இதையும் படியுங்க: காவல் நிலையம் முன்பு பிரபல நடிகர் போராட்டம்.. கைது செய்ததால் பரபரப்பு!!
மேலும் போலீசார் விசாரணையில் முதலில் சொத்து தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் ஆரம்பத்தில் நினைத்தனர்.
ஆனால் பின்னர் போலீஸ் விசாரணையில், மதுவுக்கு அடிமையான ஷியாம் தனது உறவுமுறைகளை மறந்து வீட்டில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது.
இதனால் ஷ்யாம் தாய் சாலம்மா, ஆட்டோ ஓட்டுநர் மோகன், அவரது சகோதரர் சுப்பிரமணியம் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு முழு விவரங்களையும் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.