எனக்கு நீதியே கிடைக்காதா? மகளுடன் மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தாய் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 11:39 am

எனக்கு நீதியே கிடைக்காதா? மகளுடன் மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தாய் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையுடன் மண்ணனேய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்கட்கிழமை நடைபெறும் இக்கூட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் அதேபோல் பொதுமக்களும் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து வருவது வழக்கம்

இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நத்தம் செங்குறிச்சி S.ஆலம்பட்டியை சேர்ந்த மல்லிகா (30) கூலித் தொழிலுக்கு சென்று வருகிறார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் மகாலட்சுமி என்ற 11 வயது பெண் குழந்தை உள்ளது

இந்நிலையில் கணவர் ஆனந்தராஜ்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தன்னையும் தனது மகளையும் தினந்தோறும் குடித்துவிட்டு அடிப்பதும் உதைப்பதும் ஆபாசமாக பேசுவதுமாக தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார்.
யார் போய் கேட்டாலும் அவர்களையும் தாக்குவது ஆபாசமாக பேசுவது என ஆனந்தராஜ் செய்து வருவதாகவும் மேலும் ஆனந்தராஜின் தாயாரும் அவருடன் இணைந்து கொண்டு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகின்றார்

காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை தங்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. எனவே இதன் காரணமாக நானும் எனது மகளும் மண்ணனேய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக கூறினார்

11 வயது குழந்தையுடன் தாய் மற்றும் மகள் தீக்குளிக்க முயற்சி செய்தது மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!