கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெரியம்மா.. கண்கூடாக பார்த்த தங்கை மகன் : உயிரை பறித்த ஓசூர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 2:33 pm

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெரியம்மா.. கண்கூடாக பார்த்த தங்கை மகன் : உயிரை பறித்த ஓசூர் சம்பவம்!!

கிருஷ்ணகிரியில் ஓசூர் அருகே பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி,. 39 வயதாகும் அவர் அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதியின் கணவர் கேசவமூர்த்தி இறந்து விட்டார். இந்த நிலையில் பேரிகை அருகே மகாதேவபுரத்தை சேர்ந்த 40 வயதாகும் வெங்கடேஷ் என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். வெங்கடேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து விட்டார்.

முதலில் வெங்கடேசுக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது. இதை ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து பெரியம்மா ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ் கடும் கோபம் அடைந்தார். தனது பெரியம்மாவிடம் இப்படி எல்லாம் நீங்கள் செய்யலாமா என்று கேட்டு கண்டித்துள்ளார்.

உண்மை வெளியே தெரியவந்ததால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை இரவு அங்கன்வாடி மைய ஆசிரியை ஜோதியின் வீட்டிற்கு டிரைவர் வெங்கடேஷ் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீங்க.. இனி மேல் இந்த பக்கமே வரக்கூடாது என்று கேட்டு வெங்கடேசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட இடையில் வந்த ஜோதி ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஜோதியும், ஹரீசும் கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்துள்ளார்கள். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார்.

உடனே படுகாயம் அடைந்து அலறிய வெங்கடேசின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, வெங்கடேசின் கள்ளக்காதலி ஜோதி மற்றும் அவருடைய தங்கை மகன் ஹரீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஓசூர் பேரிகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 1724

    0

    0