கல்யாணம் முடிந்த கையோடு தாய், தந்தையை கை கழுவிய மகன், மகள் : தவித்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 9:01 pm

கல்யாணம் முடிந்த கையோடு தாய், தந்தையை கை கழுவிய மகன், மகள் : தவித்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள நெல்லிக் கொம்பை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 72) மாரியம்மாள் (வயது 65) இருவருக்கும் திருமணம் ஆகி ராஜாமணி (வயது 50) என்ற மகள் திருமணம் ஆகி திண்டுக்கல் பகுதியில் வசித்து வருகிறார்.

மேலும் சுப்பிரமணி (வயது 46) என்ற மகன் நெல்லி கோம்பையில் குடியிருந்து சுமார் 8 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்த நிலையில் தங்களை பார்க்க யாரும் வராததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வயதான தம்பதியினர் இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அருகில் இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 727

    0

    0