மகளின் உல்லாசத்தால் பறிபோன தாயின் உயிர் : துப்புரவு பணியாளர் கொலையில் திருப்பம்.. விலகிய மர்மம்.. சிக்கிய ஆண் நண்பர்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 11:52 am

பழனியில் பெண் துப்புரவு பணியாளர் கொலையில் புதிய திருப்பமாக மகளுடன் தவறான தொடர்பில் இருந்த ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (வயது 55). பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே சென்று அன்னம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.

அப்போது இருதினங்களுக்கு பிறகு பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு அருகில் அன்னம்மாள் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடனடியாக கிராமத்தினர் பழனி தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.
மேலும் உடல் அழுகி நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனைக்காக அன்னம்மாளின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் உடனடியாக போலீசார் கொலையாளியை நெருங்க முடியவில்லை. இதனிடையே கிராமத்தில் உள்ள அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

துப்புரவு பணியாளரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க கோரி கிராம மக்களும், சில அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு தினங்களுக்கு உடலை வாங்க மறுத்த உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். போலீசார் பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அன்னம்மாளின் மகள் புவனா (வயது 27) மீது சந்தேகம் அடைந்த போலீசார் புவனாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர். புவனாவுக்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததும் அவர்களுடன் தொலைபேசியில் பேசி பழகி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து புவனாவின் ஆண் நண்பர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் புது ஆயக்குடியைச் சேர்ந்த கனகராஜ், அன்னம்மாளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கூலி வேலைக்குச் சென்று வரும் கனகராஜுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அன்னம்மாளின் மகள் புவனாவிடம் பழகி வந்ததும், விஷயம் தெரிந்து கனகராஜை அன்னம்மாள் எச்சரித்ததும் தெரிய வந்துள்ளது.

மகளை தன்னுடன் சேர்த்து வைக்கக் அன்னம்மாளை பலமுறை தொடர்ந்து வற்புறுத்தி வந்த கனகராஜ். இந்த நிலையில் கனகராஜ் அன்னம்மாளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். விறகு சேகரிக்க அதற்காக கம்மாய்க்கு அருகில் சென்ற அன்னம்மாளை நோட்டமிட்ட கனகராஜ் பின் தொடர்ந்து சென்று அன்னம்மாளை தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது.

கொலை சம்பந்தமாக கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்த பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மகளுடன் பழகிய நபரை எச்சரித்ததற்காக தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 696

    0

    0