வாகன ஓட்டிகளே உஷார்… ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடும் கும்பல் : வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2022, 10:26 am
கோவையில் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை லாலிரோடு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளானர்.
அவ்வப்போது நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் அளவு குறைவதால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது இரவு நேரங்களில் இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடுவதை கண்டறிந்தனர்.
பெட்ரோல் விலை உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் திருடர்களால் மேலும் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.