Maaza ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி… ஆசை ஆசையாய் குடித்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி ; ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 4:29 pm

வேலூர் அருகே மாம்பழம் ஜூஸ் பாக்கெட்டில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அடுத்த பி.கபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் நதியா என்பவருக்கு 13 வயதில் ஒரு மகளும், நான்கு வயதில் சரவணன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒட்டல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இவரது மகனும், மகளும் ஹோட்டல் எதிரே உள்ள பெட்டிக்கடையில் 10 ரூபாய் விலை உள்ள தனியாருக்கு சொந்தமான மாசா மாம்பழம் ஜூஸ் வாங்கி வந்துள்ளனர்.

அப்போது, சிறுவன் சரவணன் ஜூஸ் பாக்கெட்டை எடுத்து ஜூஸ் ஓட்டையில் ஸ்டாவை வைத்து உரிய தொடங்கியுள்ளான். ஜூஸ் வழக்கம்போல் இல்லாமல் கசப்பு தன்மையுடன் இருந்துள்ளது.

இதனிடையே, ஜூஸ் பாக்கெட்டை பிரித்து பார்த்த பொழுது, அதில் குட்டி எலி ஒன்று இறந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு, மாம்பழம் ஜூஸில் எலி இருந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் மாம்பழம் ஜூஸில் எலி இறந்திருந்த சம்பவம் கேவிகுப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

  • Naga chaitanya Strict Order To Sobhita சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
  • Views: - 511

    0

    0