எம்.பி. விஜய் வசந்த் குறித்து முகநூலில் ஆபாச பதிவு : காங்கிரஸ் கட்சியினர் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2023, 9:11 pm

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தன்னுடைய முகநூல் பதிவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து தரக்குறைவான தகாத வார்த்தைகள் உபயோகித்து திட்டி இருந்தார்.

எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.

மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர்கள் செல்வன், சிவ பிரபு, மாவட்ட விவசாய அணி தலைவர் ஜான் சௌந்தர், திருவட்டார் வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் ஜெபா உட்பட ஏராளமானவர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த புகாரை அளித்தனர்.

  • Tamil cinema actresses 2025 2025-ல் கோலிவுட்டை கலக்க போகும் இளம் நடிகைகள்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 471

    0

    0