ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு.. ஃபெஞ்சல் புயலில் சோகம்!

Author: Hariharasudhan
30 November 2024, 6:37 pm

சென்னை முந்தியால்பேட்டையில் மழைக்கு இடையே ஏடிஎம் மையம் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

அந்த வகையில், கனமழையால் முத்தியால்பேட்டையில் உள்ள மண்ணடி பிரகாசம் பகுதி சாலைகள் மழைநீரால் நிரம்பியவாறு குளம் போல் உள்ளன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள மலையப்பன் தெருவில் சந்தன் (20) என்ற இளைஞர் வசித்து வந்தார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் இன்று (நவ.30) நீர் சூழ்ந்த பிரகாசம் சாலையில் உள்ள தண்ணீரில் நடந்து வந்து, அங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காகச் சென்று உள்ளார்.

MP youth died in munthiyalpet atm center

அப்போது, சந்தன் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். இதனையடுத்து, இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், தண்ணீர் விழுந்த அவரை அருகில் இருந்த ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: புயல் கரையைக் கடக்க டைம் ஆகலாம்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஏடிஎம் மையத்தில் இருந்த இரும்புக் கம்பியை கையால் பிடித்த போது மின்சாரம் தாக்கி சந்தன் கிழே விழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 153

    0

    0