ஹிட்மேனை மறைமுகமாக தாக்கினாரா MSD? கொதிப்பில் ரசிகர்கள்!

Author: Hariharasudhan
1 January 2025, 6:07 pm

PR பணிகள் குறித்து தோனி கூறிய கருத்து, ரோகித் சர்மாவைக் குறிப்பிடுவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மும்பை: சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாத கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில், சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தோனி, “வாழ்க்கையின் எந்த நேரத்திலும் சோசியல் மீடியாவின் ரசிகனாக நான் இருந்ததில்லை. எனக்கு பல்வேறு தருணங்களிலும் நிறைய மேலாளர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே என்னிடம் சோசியல் மீடியாவை பயன்படுத்தி, ரசிகர்களுடன் எப்போதும் இணக்கமாக இருங்கள் என்றே கூறுவார்கள்.

குறிப்பாக, கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக நான் அறிமுகமான போது, சில ஆண்டுகளில் ட்விட்டர் மிகவும் பிரபலமானது. அதன்பின் இன்ஸ்டாகிராமும் வந்துவிட்டது. அப்போது, நீங்கள் சில பிஆர் பணிகளைச் செய்ய வேண்டும், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என மேலாளர்கள் கூறுவர்.

அதற்கு, நீங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடினாலே போதுமானது, உங்களுக்கு எந்த பிஆர் பணிகளும் தேவையில்லை என நான் பதிலளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தோனியின் இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில், அது ரோகித் சர்மாவை மறைமுகமாக தாக்கி இருப்பதாக ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.

இதையும் படிங்க: புத்தாண்டில் வாரிசு நடிகருடன் குத்தாட்டம்…போதையில் தள்ளாடிய பேபி நடிகை…ரசிகர்கள் ஷாக்..!

முன்னதாக, டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை என்பதால், அவர் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் சோசியல் மீடியாவில் ரோகித் சர்மாவின் பிஆர் ஏஜென்சிகள், இப்போது வரை அவருக்கு ஆதரவாகவே பதிவிட்டு வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…