தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!
Author: Selvan29 March 2025, 2:13 pm
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டத்தில் CSK 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளனர்.
இதையும் படியுங்க: அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!
சேப்பாக்கத்தில் கடந்த 17 வருடத்திற்கு பிறகு CSK-வை வீழ்த்தி RCB வெற்றியை ருசித்துள்ளது.போட்டியில் முதலில் பேட்டிங் செய்த RCB அணி,7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.இந்த இலக்கை CSK அணி எளிதாக அடைந்து வெற்றியை ருசிக்கும் என அனைவரும் ஆர்வமுடன் இருந்தனர்.
CSK அணியில் ருதுராஜ்,சிவம் துபே,தீபக் ஹூடா,ராகுல் திருப்பாதி,சாம் கரன் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இதனால், CSK அணி மைதானத்தில் தடுமாறிக்கொண்டு இருந்தது.இனி வெற்றிபெறுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தோனி இறங்குவதற்கு பதிலாக அஸ்வின் களமிறங்கினார்.
இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி ஏன் இறங்கவில்லை என்று குழம்பி போய் இருந்தனர்,ஒருகட்டத்தில் CSK வீரர்கள் வெற்றிக்கு ஆடாமல் ஆல் விக்கெட் போகக்கூடாது என்ற எண்ணத்தில்,பந்தை மட்டை போட்டு வந்தனர்,தோனி முன்னாடி இறங்கி இருந்தால் வெற்றியின் பக்கத்திலாவது சென்றிருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வந்தனர்.
தோனி 9 வீரராக களமிறங்க அவர் ஏன் ஆட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது,அவரது பங்கே அணியின் இக்கட்டாட்டன சூழ்நிலையில் இறங்கி அதிரடியாக ஆட வேண்டும்,ஆனால் நேற்று நடந்த ஆட்டத்தில் எதிராக இருந்தது.
மேலும் தோனி பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காக அணியில் மற்ற வீரர்கள் அவுட் ஆனால் CSK ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி கொண்டாடி வருகின்றனர்,அவர் இறங்கி சிக்ஸர் அடித்தல் போதும் என்ற மனநிலையில் ரசிகர்கள் உள்ளனர்,இதை பலரும் விவாதித்து முட்டாள்தனமாக உள்ளது என கூறுகின்றனர்.
CSK-வின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு மைதானத்தில் CSK ரசிகர்களில் செயல் வருத்தத்தை கொடுக்குகிறது என தெரிவித்துள்ளார்,தோல்வி அடைஞ்சாலும் பரவாயில்லை தோனி இறங்கி சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற மனநிலை எப்போதும் மாறும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.