கோவையில் தொழில் முனைவோருக்கு எம்.எஸ்.எம்.இ கார்டு : பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்க காட்மா சங்கம் கோரிக்கை..!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 6:33 pm

கோவை : கோவையில் பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்படவேண்டும் என்றும், ஜாப் ஒர்க்கிற்கான வரியானது 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று காட்மா சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு தொழில் அமைப்புகளும் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று வருகின்றன. அதன்படி, கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) மத்திய அரசிடம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

Foundry Industry's strike: 5,000 Micro industries of COTMA association in  Coimbatore and Tirupur to be shut down Tomorrow - Simplicity

இதுகுறித்து காட்மா அமைப்பின் தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றால் தொழில்கள் முடக்கப்பட்டு, பொருளாதாரத்தை இழந்து நிற்கும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கான தற்போதைய வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஏற்கனவே பெற்றுள்ள கடன்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.

லேபர் சார்ஜ் அடிப்படையில் செய்யப்படும் ஜாப் ஒர்க்கிற்கான ஜி.எஸ்.டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட வேண்டும்.

கோவையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும். மூலப் பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்பட்டு, விலை குறைக்கப்பட்டு, நியாயமான விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு “கிசான்” கார்டுகள் வழங்கப்படுவது போல, தொழில் முனைவோர்களுக்கும் தங்கள் தொழில் சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் வாங்க “எம்.எஸ்.எம்.இ” கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 4619

    0

    0