மறுபடியும் முதுகுளத்தூர் கலவரம் வராம பாத்துக்கோங்க..வடக்கு தெற்கு போகணும்னா வாயை கொறைங்க : அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக கோஷம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 April 2022, 5:06 pm
ராமநாதபுரம் : அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தேவேந்திர குல வோளாளர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கொச்சையாக பேசியது திமுகவினரிடைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் ராஜகண்ணப்பன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்திக்க அமைச்சரின் உதவியாளரிடம் நேரம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சரை சந்திக்க அவரது உதவியாளர் ராஜேந்திரனை அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் சிவகங்கையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு சென்ற போது அமைச்சர் ராஜகண்ணப்பன், ராஜேந்0தரனை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த ராஜேந்திரன், ஊடகத்தை சந்தித்து தன்னை 6 முறை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதாக பகிரங்கமா கூறினார். இதையடுத்து அமைச்சருக்கு எதிராக தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது
மேலும் சாதி பெரைய கூறி திட்டியதை கண்டித்து ராஜேந்திரன் சார்ந்த தேவேந்திர வேலாளர் சமுதாய மக்ள் ஊர்வலமாக வந்து முதுகுளத்தூரில் உள்ள காக்கூர் முக்கு ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தால் போக்குவரத்து துறையில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ள ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தல் அச்சமுதாய மக்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தேவேந்திரர் குல வேளாளர் அமைப்பின் பொறுப்பாளர் எஸ்.ஆர் பாண்டியன், மீண்டுமொறு முதுகுளத்தூர் கலவரம் ஏற்படாதவாறு அதிகரிகள் பார்த்துக்கொள்ள வேண்மும், வடக்கே, தெற்கே போகணும்னா கவனமா பேசணும், கண்ணப்பனுக்கு கடைசி எச்சரிக்கை, வாய கொற இல்லாட்டி வாயில்லாம போயிறும் என கொச்சையாக பேசினார். இவரது பேச்சால் திமுகவினரிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.