மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணுக்கு கொடுமை.? மீட்கப்பட்ட இளம்பெண் பகீரங்க குற்றச்சாட்டு..!

Author: Rajesh
11 May 2022, 11:07 am

மோனிஷா என் மோனாலிசா, மலபார் போலீஸ் போன்ற படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை மும்தாஜ். இதன் பின்னர், குஷி, சாக்லேட் படத்தில் மல மல மருதமல பாடல் போன்றவற்றின் மூலம் பிரபலம் அடைந்தவர். தற்போது பெரும்பாலும் திரைப்படங்களில் நடிப்பதில்லை. இந்நிலையில், இவர் அண்ணா நகர் 2வது பிரதான சாலையில் உள்ள ‘ர்’ பிளாக் பகுதியில் சகோதரனுடன் வசிக்கிறார்.

இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து பணிப்பெண் ஒருவர் தன்னை கொடுமை படுத்தியதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மும்தாஜ் வீட்டில் கடந்த 6 வருடங்களாக உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முஜூதீன் (23) என்பவர் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவர் திடீரென வெளியே சாலையில் சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் 100க்கு கால் செய்து இதுகுறித்து தகவல் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணாநகர் போலீசார், அப்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது விசாரணையில் முஜூதீன் மற்றும் அவரது தங்கை பணிப்பெண்களாக பணிபுரிந்து வருவதாகவும், கடந்த சில மாதங்களாக தனக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் மொபைல் போன் பேசுவதற்கும், டிவி பார்ப்பதற்கும் அனுமதி அளிக்கவில்லை எனவும் அதனால் எனக்கு அங்கு வேலை பார்க்க பிடிக்கவில்லை எனவும் தன்னை தனது பெற்றோரிடம் ஒப்படைத்து விடுமாறும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகை மும்தாஜ் வீட்டில் விசாரணை மேற்கொண்டதில், அவரது தங்கையும் இங்கு பணிபுரிந்து வருவதாகவும், அக்கா தங்கை பிரச்சனையில் அவர் இங்கிருந்து செல்ல நினைப்பதாகவும் இருவரையும் நாங்கள் எங்கள் வீட்டு பெண்களாகவே கருதி வருவதாகவும் நடிகை மும்தாஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அப்பெண் நடிகை மும்தாஜ் வீட்டிலேயே தங்கி கொள்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து முஜூதீனை மீட்ட அண்ணாநகர் போலீசார் பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும், அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சென்னைக்கு வர சொல்லி உள்ளனர். மேலும், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1327

    0

    0