திருப்பூர் – அவிநாசி சாலையில், லாரி திரும்பியபோது அறுந்த மின் கம்பியால் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர் சுப்பான் என்ற மணி. 58 வயதான இவர், திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இவர் திருப்பூர் – அவிநாசி சாலை, எஸ்ஏபி ஸ்டாப் அருகில் குடிநீர் கசிவு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது,அவ்வழியாக பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் இருந்து, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு நுால் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதையும் படிங்க: மாயமான மாணவி… ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்தி உல்லாசம் : பாய்ந்தது போக்சோ!
இந்த லாரி, ரோட்டில் இருந்து கம்பெனி வளாகத்திற்குள் திரும்பியபோது, அங்கு தாழ்வாகச் சென்ற மின் கம்பி மீது உரசியது. இதனால் மின் கம்பி அறுந்து, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மாநகராட்சு ஒப்பந்தப் பணியாளர் மணி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய அனுப்பர்பாளையம் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமாவில் முத்தக்காட்சி என்றால் முகம் சுளிக்கும் ரசிகர்களே அதிகம். ஆனால் தற்போதைய காலத்தில் முத்தக்காட்சி என்பது படத்துக்கு படம் இருந்து…
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சிங்கப்பூர் அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான…
அசுதோஷ் சர்மா யார்? ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா தனது…
ஐபிஎல்லில் தேர்வாகச் செய்த பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என விக்னேஷ் புத்தூருக்கு தோனி அறுவுறுத்தியுள்ளார். சென்னை: 18வது ஐபிஎல்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சக்திவேல் (27) என்பவர் தமிழக வெற்றி கழகத்தின்…
2026 தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் அரசியல்…
This website uses cookies.