RED TAXIல் வந்த இளைஞரை வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டிய கும்பல்.. திண்டுக்கல்லில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2025, 2:31 pm
திருப்பூர் மாவட்டம் முருகபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் (வயது 24). இவர் திருப்பூரில் இருந்து திண்டுக்கல்லிற்க்கு தனது சொந்த வேலைக்கு வந்துவிட்டு மீண்டும் திண்டுக்கல் பழனி சாலையில் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்.
இதையும் படியுங்க : மாணவிகள் முன் செய்யக்கூடாத செயல்.. அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!
அப்போது ரெட்டியார்சத்திரம் அருகே அவரை பின்தொடர்ந்த இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ரெட் டாக்சி மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தி காரில் இருந்த வசந்தை வெளியே இழுத்து நடு ரோட்டில் சரமாரியாக வெட்டிவிட்டு ரயில்வே தண்டவாளத்தின் அருகில் காரை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த வசந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் மர்ம நபர்கள் விட்டு.சென்ற காரை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.