ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு.. பட்டப்பகலில் கொடூரம்!

Author: Hariharasudhan
20 November 2024, 3:58 pm

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய நபர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று (நவ.20) வழக்கம்போல், கண்ணன் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் பணி காரணமாக இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த கண்ணன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்தவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், ஆனந்தன் அருகில் இருந்த JM 2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Annamalai Sad

மேலும், இந்த கொலை முயற்சிக்கு முன்விரோதமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதேபோல், பட்டப்பகலில் வழக்கறிஞர், அதிலும் நீதிமன்ற வளாகத்திலே அரிவாளால் வெட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இதையும் படிங்க: பள்ளி மாணவியின் வாயை பொத்தி கூட்டு பாலியல்.. புதருக்குள் நடந்த கொடூர சம்பவம்!

அண்ணாமலை கண்டனம்: அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது.

சட்டம் அற்ற காடாக தமிழகத்தை மாற்றியதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்னைகளைத் திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது” என தனது எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 229

    0

    0