11ம் வகுப்பு மாணவி கழுத்தறுத்துக் கொலை…வீட்டில் தனியாக இருந்தபோது நிகழ்ந்த கொடூரம்: பெற்றோர்களை அதிர வைக்கும் பின்னணி..!!
Author: Rajesh30 March 2022, 1:17 pm
திருப்பூர்: உடுமலையில் வீட்டில் தனியாக இருந்த 11ம் வகுப்பு மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சிங்கபூர் நகர் பத்திரகாளியம்மன் லே-அவுட்டில் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் உடுமலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மாணவியின் தாயார் பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புற வாசல் அருகே அவரது மகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியின் தாயார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மாணவி ஏற்கனவே, இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஷாங் சாய் மற்றும் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி தேன்மொழி வேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை செய்த பின்புதான் கொலையா தற்கொலையா என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த மாணவி கழுத்து அறுக்கபட்டு இறந்த சம்பவம் இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.